துமிந்த சில்வாவிற்கு மரணதண்டனை?
முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் பணிப்புரையினில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்,யுவதிகளை கொலை செய்து கடலில் வீசும் பாதாள உலக கும்பலை வழிநடத்திய நபருக்கு மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம், அதனை நிறைவேற்றுமாறு இன்று உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக, பிரதிவாதிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு மனு, இன்று (11), பிற்பகல் 2.30 மணியளவில் உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு, பிரதம நீதியரசர்களான பிரியசாத் டெப், புவனேக அலுவிகார, நலின் பெரேரா, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித மலல்கொட உள்ளிட்ட நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாரத லக்ஷமன் உள்ளிட்ட நால்வர், கடந்த 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி, முல்லேரியாவ பகுதியில் வைத்து, துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment