Header Ads

test

வெடிவிடும் டக்ளஸ்,அங்கயன்?


கொழும்பினை மையப்படுத்திய  பூகோள அரசியல் தூள்பறந்து கொண்டிருக்க யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் ஒருபுறமும் இன்னொரு புறமும் வெடி கொழுத்திக்கொண்டுள்ளனர்.

இன்று அமெரிக்கா, இந்தியா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா, ஜப்பான், கனடா, உள்ளிட்ட 20 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் ரணில் விக்கிரமசிங்கவைச்சந்தித்துள்ளனர்.

அதே சம நேரத்தில் சீன தூதுவர் மகிந்தவைச்சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக ரணிலை இந்திய மற்றும் அமெரிக்க தூதர்கள் சந்தித்துள்ளமை மைத்திரிக்கான முக்கிய செய்தியாக பார்க்கப்படுகின்றது.

இதனிடையே தமக்கான அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள டக்ளஸ் தனது ஆதரவாளர்கள் மூலம் வெடி கொழுத்திக்கொண்டு திரிவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மறுபுறம் இருக்கின்ற பிரதி விவசாய அமைச்சர் கதிரையினை காப்பாற்றிக்கொள்ள அங்கயனும் தனது ஆதரவாளர்கள் மூலம் வெடி கொழுத்துவதில் மும்முரமாகியிருக்கின்றார்.அவரது கிரமமான வல்வெட்டியிலும் இரவிரவாக வெடி கொழுத்தி கொண்டாடப்பட்டுள்ளது.

No comments