Header Ads

test

பாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்?

அரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இன்று (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தமிழ் அரசியல் கைதிகள்  தொடர்பில்  அரசாங்கத்தின்  தற்போதைய நிலைப்பாடு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், கடந்த வாரம்  தமிழ் அரசியல் கைதிகள் குறித்து நான் பிரதமருடன் கலந்துரையாடினேன்.மேலும் தற்போதுள்ள நூற்றுக் கணக்கானோருக்கும் சட்டரீதியாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது,அத்துடன் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளவர்களில் எத்தனை பேரை விடுவிக்கலாம் என்றும் நாம் கலந்துரையாடினோம்,இதில் கதிர்காமரை கொலை செய்தோரும் உள்ளதாகவும் அவர்களை விடுதலை செய்வது சாத்தியமில்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டதாக அமைச்சர் ராஜித கூறினார்.

அத்துடன்  மிக பாரதூரமற்ற வழக்குகளும் உள்ளன,ஆகவே அவ்வாறுள்ள அனைவரது விடயங்களும் தீர்க்கப்பட்டுள்ளதுடன்  மேலும் 102 பேரது வழக்குகள் தொடர்பிலேயே தீர்மானிக்கப்படவுள்ளன,ஆகவே அவை தொடர்பில்  பி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது யாருக்கு தண்டனையளிப்பது என்பது குறித்தே தற்போது கலந்துரையாடி வருகின்றோம்' என்றார்

No comments