Header Ads

test

றோவினை குற்றஞ்சாட்டவில்லை:மைத்திரி பல்டி!


தன்னை கொலை செய்ய இந்திய றோ பிரிவு முற்பட்டதான ஜனாதிபதி மைத்திரியின் குற்றச்சாட்டையடுத்து கெர்ழும்பிலுள்ள இந்திய தூதர் அவரை சந்தித்துள்ளார்.இச்சந்திப்பில் றோவின் மூத்த அதிகாரியொருவரும் பங்கெடுத்திருந்ததாக தெரியவருகின்றது.

இதன் தொடர்ச்சியாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் அவ்வாறான கொலை முயற்சிகள் தொடர்பில் எந்தவொரு குற்றச்சாட்டையும் மைத்திரி வைத்திருக்கவில்லையென மறுதலிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று காலை ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த கெர்ழும்பிலுள்ள இந்திய தூதரிடம் தொடர்புடைய விளக்கத்தை மைத்திரி தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே ஜனாதிபதி என்ற முறையில் மைத்திரி வெளியிட்டுள்ள கருத்துக்கள் பலராலும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

மைத்திரி தனது அடுத்த ஜனாதிபதி கதிரைகனவுக்காக தொடர்ந்து முயன்று வருகிறார். போர் குற்றவாளியாக தன்னை மின்சார கதிரையில் உட்கார வைக்கப் போகிறார்கள் என மகிந்த அனுதாப வாக்குகளை பெற முயன்றது போல , தன்னை ரணில் படுகொலை செய்ய திட்டம் போடுகிறார் என்றதொரு நாடகத்தை அரங்கேற்ற முற்பட்டார்.

இந்தியாவிற்கு எதிராக அல்லது அதன் தேசிய புலனாய்வு துறைக்கு எதிராக எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் பேசுவதென்பதை இந்தியா பாரதூரமாக கருதுவதாக டெல்லி கொழும்பிற்கு அறிவித்துள்ளது. அதை இலங்கைரு ஜனாதிபதி சொல்வதென்பதென்பது மிக ஆபத்தானதெனவும் அது சுட்டிக்காட்டியுள்ளதாம்.

No comments