Header Ads

test

அடிமுடி அறியா அறிவார்ந்த பெருவெளி:தராகி சிவராம்!

சபாலிங்கம்.

அவர் தனது பாதுகாப்பு வளையத்தை விட்டுவெளியே வந்திருந்தது மெய்பாதுகாவலர்களிற்கு தர்மசங்கடமாகியிருந்தது.தன்னுடைய முதுகை அவர் ஆதரவாக தடவிய அந்த கணங்களில் உள்ளார்ந்த அன்பு தன்னுள் பரவுவதை சிவராம் உணர்ந்தார்.உண்மையில் அந்த தலைவனை நான் அடையாளம் காண தாமதித்துவிட்டேன்.சிவராமின் வாயிலிருந்து நெகிழ்வுடன் அந்த வார்த்தைகள் வந்து விழுந்தன. 

அரசு புலிகளிற்கிடையிலான யுத்தம் முனைப்பு காட்டத்தொடங்கிய காலத்தில் சிவராம் தலைவருடனான சந்திப்பிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.சிவராமின் தலைக்கு மேல் பல கத்திகள் தொங்கிக்கொண்டிருந்த சூழலில்  அவரது பாதுகாப்பு தொடர்பில் விடுதலைப்புலிகள் தலைமை ஆழமான அச்சங்கொண்டிருந்தது.

எதையும் பொருட்படுத்தாது விட்டேத்தியாக இலங்கை முழுவதும் சுற்றி திரிந்து கொண்டிருந்த சிவராமிற்கு ஆலோசனை வழங்கவேண்டிய தார்மீக பொறுப்பு தமக்கிருப்பதாக உணர்ந்து கொண்ட சூழலில் அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

வெளியே கருணா குழு மற்றும் இலங்கை புலனாய்வு குழுவென மோப்பநாய்கள் சுற்றித்திரிந்தாலும் இந்திய மற்றும் மேற்குலக நாடுகளது புலனாய்வு கட்டமைப்புக்கள் சிவராமை இலக்கு வைத்திருப்பது தொடர்பிலான புலனாய்வு அறிக்கை புலிகள் தலைமையினை கிட்டியிருந்தமையே அவசர சந்திப்பிற்கான காரணமாகியிருந்தது.

பொட்டு அம்மான்,மாதவன் மாஸ்டர் மற்றும் இளந்திரையன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்த சந்திப்பில் முதன்முதலில் தலைவரை சிவராம் சந்தித்திருந்தார்.

தற்காலிகமாகவேனும் நாட்டைவிட்டு வெளியேற அல்லது வன்னியில் தங்கி விட ஆலோசனைகள் தலைவரால் முன்வைக்கப்பட்டிருந்தது.ஆனாலும் தனக்கு இலங்கை புலனாய்வு கட்டமைப்புக்களிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாக கருதவில்லையென சிவராம் சொல்லிக்கொண்டார்.நீண்ட ஆலோசனைகளின் பின்னர் சந்திப்பிலிருந்து சிவராம் புறப்பட தயாரானார்.

என்ன நினைத்தாரோ எவன்னவோ சிவராமுடன் கதைத்தவாறே தனது அறையிலிருந்து வெளி வாசல்வரை தலைவர் வந்திருந்தார்.மெய்ப்பாதுகாவலர்கள் விறைத்தபடி பின் தொடர அவர்களை விலகிச்செல்ல தலைவர் பணித்திருந்தார்.வாகனத்தில் ஏறத்தயாரான அந்த கணத்தில் ஆதரவாக சிவராமின் முதுகை தலைவரது கைகள் தடவிக்கொண்டன.சிவராமின் கண்கள் பனித்திருந்தன.அந்த சந்திப்பு பின்னர் எப்பொழுதும் நிகழப்போவதில்லையென்பதை அவர்கள் இருவரும் சிலவேளை தீர்க்கதரிசனத்துடன் உணர்ந்திருக்கவும் கூடும்.

இப்படியொரு தலைவன் எமது போராட்டத்திற்கு கிடைத்தமைக்கு தமிழ் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.இனி நான் செத்தாலும் பரவாயில்லை.சிவராமின் வாயிலிருந்து ஏனோ அந்த வார்த்தைகள் வந்து வீழ்ந்தது.

--------------------------------------------------------------------------------------------------------------------------

2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னராக இனஅழிப்பிற்காக நீதி கோரி தமிழ் மக்கள் தாயகத்திலும் உலகெங்கும் போராடிக்கொண்டிருந்த காலமது.ஜநாவில் இலங்கை அரசிற்கு முண்டுகொடுக்கவும் கால அவகாசம் பெற்றுக்கொடுக்கவும் மஹிந்த விசுவாசிகள் மறுபுறம் ஓடித்திரிந்துகொண்டிருந்தனர்.அவர்களுள் மஹிந்தவின் காலத்து நாடாளுமன்ற குழுக்களது பிரதி தலைவராக இருந்த முருகேசு சந்திரகுமார் என்பவரும் முதன்மையானவராகவிருந்தார்.

கிளிநொச்சியில் நடத்தப்படவேண்டியிருந்த பேரணி ஏற்பாடுகளில் சந்திரகுமாரின் மைத்துனரான அந்த பிரமுகர் சுழன்றடித்து ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தார்.சந்திரகுமார் புண்ணியத்தில் மில்லியன்களில் வருமானம் புரளும் மதுபானச்சாலை உரிமையாளர்,சந்திரகுமாரின் சகோதரியை திருமணம் செய்தவகையால் மைத்துனன்,குளிரூட்டப்பட்ட சொகுசு பி;க்கப் எல்லாவற்றிற்கும் மேலாக தனது பிள்ளைகளை கவனமாக பாதுகாத்தவாறு மாற்றான் வீட்டு பிள்ளைகளை இறுதிநேர யுத்தத்தில் ஆட்திரட்டிக்கொடுத்த புண்ணியவான் அவர்.

அரச ஆதரவு பேரணியில் பங்கெடுத்தால் காணாமல் போன பிள்ளைகளை பற்றி தகவல் அறியலாமென்ற ஆசை வார்த்தையில் வந்திருந்த அந்த வயோதிப தந்தை இவரை கண்டு பொங்கியெழுந்தார்.அடேய் கோதாரி விழுவானே அங்கையிருந்து ஆள்பிடிச்சு காணாமல் போகச்செய்தனி, இப்ப இஞ்சை காணாமல் போனவையளை கண்டுபிடிச்ச தரப்போறியோ?

முகம் வெளிக்க அந்த நபர்  தலை குனிந்திருந்தார் அவர்.அவர் எல்லோராலும் அறியப்பட்ட கட்டுரையாளர்,கவிஞர்,எழுத்தாளரென தரகு வேலை பார்த்துவரும் வெளிச்சம் கருணாகரன்.

திருமண வீட்டில் மணமகனாகவும்,செத்த வீட்டில் சவமாகவும் கிடக்கும் புண்ணியாத்மா.யார் காசு கொடுத்தாலும் அதற்கேற்ப எழுதுகின்ற சீவன்கள். 

அத்தகைய சீவன்கள் மாமனிதர் தராகி பற்றி அவர் மரணமடைந்து 13 வருடங்கள் கடந்து தற்போது தோம்பு தோண்ட தொடங்கியிருக்கின்றன.

அடிமுடியறிய முடியாத விடுதலைப்பெரும் பயணத்தில் தராகி சிவராமும் ஒரு மைல்கல்.ஆட்கள் கொல்லப்படுகின்றார்களேயேன்றி அவர்களது சிந்தனைகள் அல்லவென்பது தற்போதும் தராகி சிவராமை நினைத்து புலம்பிக்கொண்டிருக்கின்ற இக்கும்பல்களிற்கு தெரிந்திருக்கப்போவதில்லை.

ஏனெனில் அவர்களை இயக்கிக்கொண்டிருக்கின்ற எசமான்களிற்கு தமிழ் தேசியம் சார்ந்த ஊடகப்பரப்பினை சிதறிக்கவேண்டிய கனவு இருக்கின்றது.

ஏன்? எதற்காக? இதன் பின்னணியென்ன என்பதை அலச தொடர்கின்றது இக்கட்டுரை..

No comments