மாகாண சபை தேர்தல்:தீர்வு அடுத்த வாரம்?
மாகாண சபை தேர்தல் தொடர்பில் அடுத்த வாரம் தீர்க்கமான முடிவொன்று கிடைக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பழைய முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் பொது உடன்பாடு எட்டுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் நேற்று (24) கொழும்பில் நடைபெற்றது.
இதில் தமிழ் முஸ்லிம் கட்சிகள், முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ் முஸ்லிம்களிடையே இனக்கப்பாடு ஏற்படாவிட்டால் நாம் முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளும் தோல்வியிலே முடியும். பழைய முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நாமும் இருக்கிறோம். அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் மூன்று வகை தேர்தல்களையும் 40ற்கு 60 முறையில் நடத்த உடன்பாடு எட்டப்பட்டது. அதேவேளை பழைய முறையில் தேர்தல் நடத்துவதற்கு தற்பொழுதுள்ள தேர்தல் சட்டத்தில் ஒரு வசனத்தை தான் மாற்ற வேண்டும். இதற்கான சட்ட வரைபும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அதிகாரப்பகிர்வு என்பன தொடர்பில் தமிழ் முஸ்லிங்களிடையே உடன்பாடு காணப்பட வேண்டும். வடக்கு கிழக்கிற்கு வெளியில் சிதறி வாழும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இதன் போது 6 மாகாண சபைகளினதும் தேர்தல்களை பழைய முறையின் கீழ் உடனடியாக நடத்தவேண்டும் என முஸ்லிம் சமூகம் சார்பில் யோசனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment