Header Ads

test

போராட்டத்தை பொறுப்பேற்கின்றன பொது அமைப்புக்கள்!

அரசியல் கைதிகளை உணவு தவிர்ப்பு போராட்டத்தை தற்காலிகமாக முடிவுறுத்த ஏதுவாக பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று நாளை சனிக்கிழமை அனுராதபுரம் செல்லவுள்ளது.

தற்போது நடைபயணத்தை மேற்கொண்டுள்ளயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்றிரவு மதவாச்சியில் தங்கிய பின்னர் நாளை அனுராதபுரத்தை சென்றடையவுள்ளனர்.அவர்களுடன் இணைந்து அரசியல் கைதிகளினை சந்தித்து அவர்களது விடுதலைப்போராட்டத்திற்கான தொடர்நடவடிக்கைகளை முன்னெடுப்போமென்ற உறுதி மொழியுடன் முடிவுறுத்த பொது அமைப்புக்கள் கோரவுள்ளன.

போராட்டத்தில் குதித்துள்ள அரசியல் கைதிகளது உடல்நிலை மோசமடைந்துள்ளமையினை கருத்தில் கொண்டு இம்முடிவிற்கு பொது அமைப்புக்கள் வந்திருந்தன.

இதனிடையே அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் மட்டுமே வரவுசெலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிப்போம் என்ற உத்தரவாதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் முன்வைக்கவேண்டுமென்ற உத்தரவாதங்களை முன்னிறுத்தியும் போராட்டத்தை நாங்கள் பொறுப்பெடுக்கின்றோமென அரசியல் கைதிகளுக்கு வாக்குறுதி வழங்கியும் போராட்டத்தை முடிவுறுத்த கோருவதென முன்னதாக வடமாகாண முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது.


பல்வேறுபட்ட பொது அமைப்புக்கள்,அரசியல் கைதிகளது விடுதலைக்கான தேசிய அமைப்பு என்பவை இணைந்து இன்றைய தினம் முதலமைச்சர் அலுவலகத்தில் சந்திப்பினை நடத்தியிருந்தன.

சந்திப்பில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானப்பிரகாரமே நாளை பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழு அரசியல் கைதிகளை சந்திக்கவுள்ளது.
இதனிடையே வடமாகாண முதலமைச்சர் தனக்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்காக கொழும்பு செல்கின்ற நிலையில் அவர் மகசீன் சிறையில் உண்ணாவிரதமிருக்கின்ற அரசியல் கைதிகளை சந்திப்பாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments