அமைச்சரை வரவேற்க மாலையோடு தமிழரசு?
சர்ச்சைக்குரிய போராட்டங்கள் நடக்கின்ற போது கூட்டமைப்பின் இரண்டாம் கட்ட தலைவர்கள்,வழமையாக புயல் ஓயும் வரை பதுங்கிக்கொள்வது அல்லது அரச அமைச்சர்களை வரவேற்பது போன்ற விடயங்களில் மும்முரமாகிவிடுவது வழமையாகும்.
இன்று அரசியல் கைதிகள் போராட்டம்,அதற்கான ஆதரவை வெளிப்படுத்தி பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியென பரபரப்பாக இருந்த போதிலும் அது பற்றியெல்லாம் அலட்டிக்;கொள்ளாமல் இலங்கையின் உள்நாட்டலுவல்கள் இராசாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல பிரதம விருந்தினராகக்கலந்துகொண்ட நிலையில் அவரை வரவேற்க மாலையும் கையுமாக யாழ்.மாவட்ட எம்.பி க்களான த.சித்தார்த்தன், ஈ.சரவணபவன் ,வடமாகாணசபை உறுப்பினர் ஜெயசேகரன்,மாநகரமுதல்வர் ஆனோல்ட் என பெரிய பட்டாளமே இன்று காத்திருந்தது.
உத்தியோகபூர்வ பணி, சனாதிபதி மக்கள் சேவை, நல்லூர் தொகுதியின் நடமாடும் சேவை இன்று யாழ். இந்துக்கல்லூரியில் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்விலேயே அடித்துப்பிடித்து அமைச்சருடன் புகைப்படம் பிடிக்கவும் பின் கதவால் அலுவல்களை பேசிக்கொள்ளவும் இக்கும்பல் அடிப்பட்டிருந்தது.
அரசியல் கைதிகள் தொடர்பில் இத்தரப்புக்கள் வாயn திறக்காதிருக்கின்ற நிலையில் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதென்பதெல்லாம் வெறும் கட்டுக்கதையென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
Post a Comment