மஹிந்தவே காரணமாம்?
மைத்திரிபால சிறிசேன தன்னைக் கொல்வதற்கான சதி முயற்சியில் ‘றோ’ ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார் என்ற வதந்தி பரவுவதற்கு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச காரணமாக இருக்கலாம் என்று இந்தியாவின் எக்கனமிக் ரைம்ஸ் ஊடகம், இலங்கை அரச வட்டாரங்களை மேற்கோள் காட்டிச் செய்தி வெளியிட்டுள்ளது.
அரச தலைவர் மைத்திரி தொடர்பான வதந்திகள் பரவுவதற்கு இலங்கையின் முன்னாள் அரச தலைவர் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகளே காரணமாகயிருக்கலாம் என்று எக்கனமிக் ரைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் இடையில் உள்ள நல்லுறவை குழப்பும் முயற்சியாகவே இது இடம்பெற்றிருக்கலாம் எனவும் எக்கனமிக்ஸ் ரைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. இரு அரசுகளுக்கும் இடையிலான உறவு எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகின்றது என்பதே மகிந்த ராஜபக்சவின் மீள் வருகையை சாத்தியமாக்கும் எனவும் எக்கனமிக்ஸ் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.
அடுத்த அரச தலைவர் தேர்தல் மூலம் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள முன்னாள் அரச தலைவர் மகிந்த – ‘றோ’ குற்றச்சாட்டு குறித்த வதந்தியைப் பரப்பியிருக்கலாம் என்று இலங்கை அரச வட்டாரங்கள் தெரிவித்தன என்று எக்கனமிக்ஸ் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை இந்தியாவுக்கு இடையில் நல்லுறவை விரும்பாத சக்திகளிடமிருந்தே இந்த வதந்தி உருவாகியிருக்கலாம் என்று ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன எனவும் எக்கனமிக்ஸ் ரைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அரச தலைவர் மைத்திரிபால அமைச்சரவைக் கூட்டத்தில் ‘றோ’ மீது குற்றம்சாட்டியதாக தாம் வெளியிட்ட செய்தி சரியானது என்று ‘த ஹிண்டு’ ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment