Header Ads

test

பேசக்கூட மறுத்த மைத்திரி:ரணிலை காப்பாற்றுகின்றதா கூட்டமைப்பு?

போராட்டத்தினை தொடர்கின்ற அரசியல் கைதிகள் தொடர்பில் பேச்சுக்கள் நடத்தக்கூட இலங்கை ஜனாதிபதி தயாராக இல்லையென்பது அம்பலமாகியுள்ளது.

வடக்கு மாகாண அபிவிருத்திச் செயலணி நேற்றைய தினம் கொழும்பில் இலங்கை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றபோது அரசியல் கைதிகள் தொடர்பில் பேச இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் தயாராக இருந்தனர்.

எனினும் இது குறித்து பேச தயாராக இருந்திராத மைத்திரி அரசியல் கைதிகள் தொடர்பாக பிரிதொரு நாளில் தொலைபேசியில் பேசுகின்றேனென கூறிவி;ட்டு கூட்டத்தை முடித்துவிட்டு வெளியேறிவிட்டார். 

முன்னதாக அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ரணிலுடன் பேசிய கூட்டமைப்பினர் அதனை தொடர்ந்து சட்டமா அதிபரையும் சந்தித்திருந்தனர்.

இந்நிலையில் அரசியல்கைதிகளின் விடுதலைக்கான பொதுமன்னிப்பினை மைத்திரியே வழங்கமுடியுமென தெரிவித்து ரணிலை பாதுகாக்க கூட்டமைப்பு முற்பட்டிருந்தது.இது மைத்திரிக்கு கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.அண்மைக்காலமாக பிரச்சினைகள் அனைத்திற்கும் மைத்திரியே காரணமென கூட்டமைப்பு குற்றஞ்சாட்டிவருவதுடன் ரணிலை பாதுகாப்பதில் மும்முரமாக உள்ளதாக மைத்திரி கருதுகின்றார்.

இதன் தொடர்ச்சியாகவே மைத்திரி கூட்டமைப்பினருடன் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் பேசாது வெளியேறிய நிகழ்வு நடந்ததாக நடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 

No comments