Header Ads

test

கஜா போக்கு காட்டி புரட்டி எடுப்பது ஏன்?

கஜா புயல் கணிப்பதற்கு போக்கு காட்டிவிட்டி தற்போது இப்படி புரட்டி எடுப்பது குறித்து தனியார் வானிலை ஆர்வலரும் பதிவருமான தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருக்கிறார்.

வங்கக் கடலில் உருவான கஜா புயல் எப்படி நகரும், எங்கு கரையைக் கடைக்கும், எவ்வளவு வலுவாகக் கடக்கும் என்பதெல்லாம் கணிக்க முடியாததாகவே ஆரம்பத்திலிருந்து இருந்தது.
இந்நிலையில், நேற்றிரவு (நவ-15) 11.30 மணியளவில் கஜா புயல் நாகை - வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. கரையைக் கடந்த பின்னரும் தீவிர புயலாக இருப்பதால் உள்மாவட்டங்களில் பலத்த காற்றும் கனமழையும் பெய்து வருகிறது.
இது குறித்து நமக்கு வெதர்மேன் அளித்த பிரத்யேக பேட்டி:
"கஜா புயல் தீவிரப் புயலாகவே இன்னும் இருக்கிறது. இப்போது புதுக்கோட்டையில் புயல் தாக்கம் நிலவுகிறது. இது அடுத்து மதுரை, திண்டுக்கல் நோக்கி நகரும். பின்னர் திண்டுக்கல் செல்லும். அப்படியே மாலை நேரத்தில் தேனி, வால்பாறை சென்று இரவு நேரத்தில் கேரளாவுக்கு நகரும்" என்றார்.
கஜா ஏன் இப்படி போக்கு காட்டியது?
கஜா புயல் உருவான நேரத்தில் அரபிக் கடலில் ஓர் உயர் அழுத்தம் (High Pressure) பசிபிக் கடலில் ஓர் உயர் அழுத்தம் (High Pressure) என இரண்டு பக்கங்களில் இருந்தும் அதற்கு தாக்கம் இருந்தது. இதனால், எந்தப் பகுதியில் கஜா புயல் செல்லும் என்பதில் குழப்பம் இருந்தது. இதனாலேயே, கஜா புயல் தீவிர புயலாக உருவாகுமா? அதிதீவிரமாக இருக்குமா? இல்லை வலுவிழந்து கரையைக் கடக்குமா என்பதை கணிப்பதில் தொடக்கத்தில் சில குழப்பங்கள் நிலவின.
எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு?
புயல் இன்னும் முழுமையாக கரையைக் கடக்கவில்லை. அதனால் புயலின் தென் பகுதியின் தாக்கத்தால் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
புயலின் வடபகுதியின் தாக்கத்தால் புதுக்கோட்டை, வட சிவகங்கை, தென் திருச்சி, தெற்கு கரூர், திண்டுக்கல், மதுரையின் வடக்கு பகுதி, தேனியின் சில பகுதிகளிலும் சூறைக் காற்று வீசும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments