Header Ads

test

இந்தியன்-2 கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால்!!

சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை காஜல் அகர்வாலுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக
செய்திகள் வெளியாகியுள்ளன.

சங்கர் அடுத்து கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ படத்தை இயக்க இருக்கிறார். கமல் இரு வேடங்களில் நடிக்கும் இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக இருக்கிறது. முந்தைய பாகத்தை போலவே கமல் இதில் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார் எனக் கூறப்படுகின்றது.

படத்திற்காக கமல் தனது உடல் எடையை குறைக்கும் வேலையில் இறங்கி உள்ளார். இதில் கமலுக்கு ஜோடியாக நடிக்க முதலில் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. எனினும் முக்கியத்துவல் இல்லாத பாத்திரங்களில் நயன்தாரா நடிக்க விரும்பம் இல்லாததால் அவர் அதை மறுத்துவிட்டார் எனச் சொல்லப்படுகின்றது.

தற்போதைய தகவல்படி ‘இந்தியன் 2’வில் நடிக்க காஜல் அகர்வாலுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர்களில் ரஜினி, கமல் தவிர மற்றவர்களுடன் காஜல் நடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Kajal Aggarwal #Indian 2 #Sankar #Kamal Haasan

No comments