கஜா புயலால் பெரும் சேதம்.. 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது.
வேதாரண்யத்தில் கஜா புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் இந்த புயலால் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.
இந்த நிலையில் கஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
நாகை, தஞ்சை, திருவாருர், திருவண்ணாமலை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், தேனி, சிவகங்கை, மதுரை,திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், புதுச்சேரி, காரைக்கால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
7 மாவட்டங்களை புரட்டி போட்ட கஜா.. இன்னும் 6 மணி நேரத்திற்கு தாக்கம் குறையாது!
சேலம் , விருதுநகர், தூத்துக்குடி, கோவை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
Post a Comment