Header Ads

test

பூமியைப் போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

நட்சத்திரம் அருகே பூமியை போன்று ஒரு புதிய கிரகம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புதிய கிரகம் பூமியை விட 3.2 மடங்கு எடை கொண்டது என விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா விண்வெளி நிறுவனம் மற்றும் ஸ்பெயின் விண்வெளி அறிவியல் மையத்தின் விஞ்ஞானிகளே சூரியன் அருகேயுள்ள ‘பர்னாட்ஸ்’ என்ற நட்சத்திரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

சூரியனிடமிருந்து 2 சதவீத சக்தியை கிரகித்து கொள்கிறது. இதன் மேற்பரப்பில் மைனஸ் 160 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. இதனால் அங்கு கடும் குளிர் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிரினங்கள் வாழமுடியாது. ஏனெனில் அங்கு திரவ நிலையில் தண்ணீர் இல்லை என குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தண்ணீர் அல்லது வாயு இருந்தால் திட நிலையில் தான் இருக்கும். அவை உறைந்த நிலையில் இருக்கலாம் என நம்பப்படுகிறது என்று விஞ்ஞானிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

#New Planet #Barnard's Star #Astronomers

No comments