Header Ads

test

T20 உலகக்கிண்ண துடுப்பாட்டத் தொடரில் இலங்கை மகளிர் அணி வெளியேற்றம்!

மேற்கிந்திய தீவில் நடைபெற்று வரும் ஆறாவது மகளிர் T20 உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டித் தொடரிலிருந்து இலங்கை மகளிர் அணி வெளியேறியுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை (16) கிரோஸ் இஸ்லேட் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் தோல்வியடைந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அதிரடியாக துடுப்பாடிய ஹெய்லி மெதிவ்ஸ் 36 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் ஓசாதி ரணசிங்க, உதேசிகா பிரபோதனி மற்றும் சஷிகலா சிறிவர்தன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை மகளிர் அணி 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, 83 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

அணித் தலைவி சமரி அட்டபத்து 44 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். மேற்கிந்திய தீவு அணிசார்பில் ஹெய்லி மெதிவ்ஸ் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஆட்ட நாயகியாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

#Sri Lanka Women Cricket Team

No comments