சென்னையில் மட்டன் பிரியாணியில் நாய்க்கறியா? 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்!!
சென்னையிலுள்ள உணவகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்து 1000 கிலோ நாய் இறைச்சி சென்னைக் காவல்துறையினரால் இன்று சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நகரிலிருந்து குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் அனுப்பி வைக்பட்ட 1000 கிலோ நாய் இறைச்சியே சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்தில் வைத்து காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
நாய் இறைச்சியை சென்னையில் பெறவிருந்து முகவரிக்குரிய நபரின் பெயரைக் கண்டுபிடித்த காவல்துறையினர் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் எந்தெந்த உணவகங்களில் மட்டன் பிரியாணி என்ற பெயரில் நாய்க்கறி பரிமாறப்பட்டது என்னும் விபரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட நாய்க்கறியை புதைத்து அழிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Chennai #DogMeat
#Chennai #DogMeat
Post a Comment