பூமிக்கு அடியில் உருவான முதலாவது ஆடம்பர உல்லாசவிடுதி!
உலகிலேயே முதன்முதலாக பூமிக்கு அடியில் கைவிடப்பட்ட சுரங்கத்தில் கட்டப்பட்ட ஆடம்பர உல்லாசவிடுதி இயங்க தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் பொதுவாக கைவிடப்பட்ட நிலக்கரி மற்றும் தங்கச்சுரங்கங்கள் பின்னர் மண்ணை கொட்டி நிரப்பப்பட்டு, சமன்படுத்தி வேறு வகையில் பயன்படுத்தப்படும்.
ஆனால், சீனாவின் பிரபல தொழில் நகரமான ஷாங்காய் நகரில் கைவிடப்பட்ட ஒரு சுரங்கத்தை இப்படி செய்வதற்கு பதிலாக ஆடம்பர உல்லாசவிடுதியாக மாற்ற கடந்த 2013-ம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது.
ஷங்காய் நகரின் மத்திய பகுதியில் இருந்து சுமார் ஒருமணி நேர பயண தூரத்தில் தற்போது 17 மாடி கட்டிடமாக ‘இன்ட்டர் கான்ட்டினென்ட்டல் டிரீம்லேன்ட்’ என்ற பெயருடன் இந்த உல்லாசவிடுதி கம்பீரமாக காட்சியளிக்கிறது.
தரை பகுதியில் இருந்து பல மீட்டர் ஆழத்தில் கட்டப்பட்டுள்ள இந்த ஓட்டல் சமீபத்தில் திறப்புவிழா கண்டுள்ளது. சுமார் 30 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பில் தீம் பார்க்குடன் உருவாகியுள்ள இந்த உல்லாச விடுதியில் 336 அறைகள் உள்ளன.
இங்கு தங்குபவர்கள் மலையேற்றம், நீர்சறுக்கு போன்றவற்றில் ஈடுபடலாம். இதில் ஓரிரவு தங்குவதற்கு குறைந்தபட்ச கட்டணமாக 3 ஆயிரத்து 394 யுவான்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
#Under Ground Hotel #China #China opens luxury hotel in quarry

Post a Comment