Header Ads

test

பருத்தித்துறை நகரசபையின் தவிசாளர் மீது மக்கள் முன்னணி குற்றச்சாட்டு!

பருத்தித்துறை நகரசபையின் 2019ம் ஆண்டுக்கான பாதீடு சட்டத்திற்கு முரணாக சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியிருக்கும் நகரசபை எதிா்கட்சி உறுப்பினா்கள், குறித்த பாதீடு சட்டத்திற்கு அமைவாக மீளவும் சபைக்கு வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த மேற்படி 6 உறுப்பினா்களும் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளதுடன், சட்டத்திற்கு முரணான பதீடு திரும்ப பெறப்பட்டு உாிய சட்ட ஒழுங்குகளுக்கு அமைவாக மீளவும் சபைக்கு கொண்டுவரப்படவேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இது குறித்து மேலும் அவா்கள் கூறுகையில், சட்டத்தின்படி சபையின் பாதீட்டு அறிக்கை 7 நாட்களுக்கு முன்னதாக உறுப்பினா்களுக்கு வழங்கவேண்டும். அதனை படித்த உறுப்பினா்கள் அது தொடா்பாக சபையில் கருத்து தொிவிக்கலாம். அது விவாதமாக இடம்பெறும். மேலும் பாதீட்டு உரையை தவிசாளா் நிகழ்த்தவேண்டும். அதில் கொள்கை விளக்கமும் இருக்கவேண்டும்.
மேலும் சபையை எந்த சந்தா்ப்பத்திலும் செயலாளா் வழிநடத்த முடியாது அதனை செய்யவேண்டியவா் தவிசாளா். இவ்வாறிருக்கையில் இதற்கு முரணாகவே பாதீட்டு அங்கீகாரத்திற்கான சபை இடம்பெற்றது. அதாவது 7 நாட்களுக்கு முன்னா் வழங்கப்படவேண்டிய பாதீட்டு அறிக்கை சபை தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே இடம்பெற்றது.
அதேபோல் 2019ம் ஆண்டுக்கான பாதீட்டு உரையை பருத்தித்துறை நகரசபையின் செயலாளா் நிகழ்த்துகிறாா். மேலும் செயலாளரே சபையை வழிநடத்தினாா். இது அப்பட்டமான சட்டமீறலாகும். இதனை நாங்கள் சபையில் சுட்டிக்காட்டியபோதும் எங்களுடைய கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
மாறாக எங்கள் உறுப்பினா் ஒருவரை சபையிலிருந்து வெளியேற்றுவதாக தவிசாளா் கூறினாா். ஆனால் அவா் சபையில் எந்தவொரு அநாகாிகமான வாா்த்தை பிரயோகங்களும் செய்யவில்லை என்பதுடன், சபை சொத்துக்களை சேதமாக்கவும் இல்லை. இந்த இரு செயல்களையும் செய்தால் மட்டுமே உறுப்பினா் ஒருவரை சபையிலிருந்து வெளியேற்றலாம்.
ஆனால் உரத்து பேசியது தவறு என கூறி எங்கள் உறுப்பினா் ஒருவா் வெளியேற்றப்பட்ட நிலையில் எமது கட்சி உறுப்பினா்கள் அனைவரும் சபையிலிருந்து வெளி நடப்பு செய்ததுடன், பாதீட்டை நாங்கள் எதிா்கிறோம். எனவும் கூ றியுள்ளோம். உண்மையில் பாதீட்டை எதிா்ப்பதாக கூறினால் உடனடியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கவேண்டும். அதுவும் நடக்கவில்லை. ஆக மொத்தத்தில் பாதீட்டு அறிக்கை உறுப்பினா்களுக்கு உாிய காலத்தில் கொடுக்கப்படவில்லை, பாதீட்டு உரையை தவிசாளா் நிகழ்த்தவில்லை, விவாதம் நடத்த இடமளிக்கப்படவில்லை. இவ்வாறு பல சட்ட மீறல்களுடன் பாதீடு கொண்டுவரப்பட்டுள்ளது.
எனவே நாங்கள் அந்த பாதீட்டினை எதிா்ப்பதுடன், உள்ளுராட்சி ஆணையாளருக்கு கோாிக்கை ஒன்றை முன்வைக்க உள்ளோம். அதாவது சட்டத்திற்கு முரணாக செய்யப்பட்ட பாதீட்டை மீளவும் சபைக்கு கொண்டுவந்து உாிய சட்ட ஒழுங்குகளுடன் செய்யப்படவேண்டும் என, மேலும் இந்த பாதீட்டை தவிசாளா் அவசர அவசரமாக சபைக்கு கொண்டுவந்து நிறைவேற்ற காரணம் உள்ளது.
அதாவது இந்த பாதீட்டில் மக்கள் நலன்சாா் திட்டங்கள் எவையும் இல்லை. ஆகவே அது தோற்கடிக்கப்படும் என்பதை தவிசாளா் நன்றாக அறிந்திருந்தாா்.
அதனாலேயே அவசர அவசரமாக நிறைவேற்றினாா். கடந்த ஆட்சியில் பருத்தித்துறையில் உள்ள மரக்கறி சந்தைக்கு பிரச்சினை கொடுக்கப்பட்டது. இந்த ஆட்சியில் பருத்தித்துறை மீன் சந்தைக்கு பிரச்சினை கொடுக்கப்படவுள்ளது. ஆனால் மக்கள் அதனை விரும்பவில் லை. வியாபாாிகள் அதைனை விரும்பவில்லை.
ஆனாலும் மீன் சந்தையை கரையோர பகுதியை நோக்கி நகா்த்துவதற்கு திட்டங்கள் போடப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் ஆளுமையற்ற தவிசாளா் மக்கள் நலன்களை கருத்தில் கொள்ளாது செயற்படுகின்றாா் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினா்கள் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

No comments