Header Ads

test

தமிழ் மக்களின் அபிப்பிராயத்தை கூட்டமைப்பு கேட்டிருக்க வேண்டாமா?

ஒரு நாள் தேர்தல், ஒரு கணப்பொழுதில் வாக் களிப்பு அவ்வளவுதான். வென்றவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பாராளுமன்ற உறுப்பி னர் என்ற பதவியோடு சுகபோகம் அனுபவிப்பார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆண்டனு பவிப்பதற்காக வாகன அனுமதிப்பத்திரம் முதல் ஏனைய கொடுப்பனவுகள் என அனைத்தும் சேர்ந்து கொள்ள, ஜனநாயகத்தின் இருப்பு கேள்விக்குள்ளாகிவிடுகிறது.

இந்த உண்மைப்பாட்டை நாட்டின் தற் போதைய அரசியல் சூழமைவு மிகத் தெளி வாக நமக்கு விளக்கி நிற்கிறது.

இவை ஒருபுறமிருக்க, 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக வந்து ரணில் விக் கிரமசிங்கவைப் பிரதமராக்குங்கள் என்று கேட்டாலும் நான் செய்யமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரி நிறுதிட்டமாகக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரி இவ்வாறு கூறிய பின் பும் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியினர் நிற்பது அவர்களின் கடும் பிடியையே காட்டுகிறது.

பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முன் னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வைப் பிரத மராக்கிய ஜனாதிபதி மைத்திரியின் செயல் சரியா? பிழையா? என்பதற்கு அப்பால்,

அவ்வாறானதொரு முடிவை ஜனாதிபதி எடுத்ததற்குப் பின்னால் வலுவான காரணங் கள் ஏதேனும் உண்டா என்று ஆராய்வது  அறிவார் தொழில்.

அவ்வாறானதோர் தேடலில் ஜனாதிபதி மைத்திரி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை களே சாட்சியங்களாக அமைகின்றன.

ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரையில் கூறப்பட்ட விடயங்களை மக்கள் ஏற்றுக் கொள் கிறார்களா? என்பது பற்றியும் ஆராய்வது இங்கு அவசியமாகின்றது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் ஜனாதி பதி மைத்திரி நாட்டு மக்களை நோக்கி தனது உரையை முன்வைக்கின்றார்.

அந்த உரையில் ரணில் விக்கிரமசிங்க மீது அவர் கொண்ட கடும் கோபம் வெளிப்பட்டு நிற்கிறது.

அதுமட்டுமன்றி எதற்கும் நான் தயார். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதம ராக்குவதற்கு மட்டும் நான் ஒருபோதும் உடன் பட மாட்டேன் என்று ஜனாதிபதி கூறுவதானது அவரின் முடிவு மறுபரிசீலனைக்குட்படக் கூடிய தல்ல என்பதையும் பட்டவர்த்தனமாக்கியுள்ளது.

ஆக, நாட்டின் அரசியல் சூழ்நிலை சுமுக மாக அமைய வேண்டுமாயின் மறுபரிசீலனை என்ற விடயம் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கமே இருப்பதாக உணரமுடிகின்றது.

இருந்தும் ரணிலைப் பிரதமராக்குவது என்ற விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைமையும் விடாத பிடி என்று நிற்பதை உணரமுடியும்.

கூட்டமைப்பின் இந்த முடிவு சறுக்கினால் அவர்கள் தமிழ் மக்களின் முகத்தில் முழிப்பது கடினம் என்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்படும்.

இவற்றையயல்லாம் வெற்றி கொள்ள வேண்டும் எனக் கூட்டமைப்பு நினைத்திருந் தால், அவசரஅவசரமாக தமிழ் மக்களின் அபிப்பிராயத்தை கேட்டறிந்திருக்க வேண்டும்.

என்ன செய்வது எனக்கு எல்லாம் தெரியும் என்று வந்துவிட்ட பின்பு யார் என்ன கூறி னாலும் அது ஏறப்போவதில்லை என்பதே உண்மை.

No comments