Header Ads

test

எம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்!

தாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர்.


தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்டு, பனி படர்ந்த தேசத்து வீதிகளில் கூடி ஆர்ப்பாட் டம் செய்தனர்.

சர்வதேசமே ஈழத் தமிழினம் கொல்லப் படுவது கண்டும் பேசாதிருப்பது முறையோ என்று நீதி கேட்டனர்.

ஜெனிவாவில் ஐ.நா அலுவலகம் முன் பாகக் கூடி நின்று முழக்கமிட்டனர்.



வெளிநாட்டுத் தூதுவர்கள், மக்கள் பிரதி நிதிகள், சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், சர்வதேச மன் னிப்புச் சபை உறுப்பினர்கள் எனப் பல தரப்பை யும் சந்தித்துத் தமிழ் மக்களின் அவலத்தை எடுத்தியம்பினர்.


இதன் பயனாகவும் சனல் 4 காணொளி மூலமாகவும் இலங்கையில் தமிழின அழிப்பு இடம்பெறுகிறது என்பதை சர்வதேசம் ஏற்றுக் கொண்டது.


இவ்வாறு ஈழத் தமிழினம் இலங்கையில் வதைபடுகிறது என்பதை சர்வதேச நாடுகளும் ஐ.நா அமைப்புகளும் ஏற்றுக் கொள்கின்ற அளவுக்கு எங்கள் நிலைமையை வெளிப்படுத் திய பெருமை எம் புலம்பெயர் உறவுகளையே சாரும்.


அன்று அவர்கள் தமக்கென்ன என்று நினைத்திருந்தால், எதுவுமே நடந்திராது.


ஆக, ஈழத் தமிழர்கள் மீது சர்வதேசத்தின் பார்வையைத் திசை திருப்பியதில் புலம்பெயர் தமிழ் உறவுகளின் வகிபங்கு காத்திரமானது என்பதை எவரும் நிராகரிக்க இயலாது.


அதேநேரம் வன்னிப் பெருநிலப்பரப்பில் கொடும் போர் நடந்தபோது போரை நிறுத்தி தமிழ் மக்களைக் காப்பாற்றுங்கள் என்று கேட் பதைக்கூட ஒத்திவைத்தவர்கள் இப்போது தமிழ் மக்களின் அரசியல் தலைமை என்ற பெயரில் நாடகமாடுகின்றனர்.


இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட விசேட பாதுகாப்பு வாகனத்தைப் பயன்படுத்தியவர் விடுதலைப் புலிகள் மீதான போர் ஓயும் வரை வாய் திறக்காமல் இருந்துவிட்டு,


இப்போது புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தை தீவிரப் போக்குடையவர்களாக வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் கூறுவதென்பது பச்சைத் துரோக மானது.


வெளிநாட்டில் இருக்கக்கூடிய எம் புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தின் கைகளில்தான் எங் கள் தமிழினத்தின் எதிர்காலமே தங்கியுள்ளது.


இலங்கை என்ற எல்லை கடந்து உலக நாடுகள் முழுவதிலும் நம் ஈழத் தமிழன் பரந்து விரிந்து வாழ்வது எங்களுக்கான பலமும் பாது காப்புமாகும்.


இலங்கை அரசு ஈழத் தமிழனை அதட்டி னால் உலகம் முழுவதிலும் எதிர்ப்பு எழும் என்ற ளவில் நிலைமை இருக்கையில்,


அதனையும் நலினப்படுத்தி விடுவதில் நம்ம வர் காட்டும் கவனத்தை நினைக்கும்போது வேதனை தாள முடியவில்லை.


எதுஎவ்வாறாயினும் தமிழ் மக்களுக்கான பலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கக்கூடிய புலம்பெயர் தமிழ் உறவுகளுடன் நெருக்கமான உறவைப் பேணிக்கொள்வது கட்டாயமானது என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments