Header Ads

test

வடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை?

இலங்கை ஜனாதிபதியின்  ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை  ஊவா மாகாணத்திற்கு கீர்த்தி தென்னகோன் மற்றும் சப்ரகமுவ மாகாணத்திற்கு தம்ம திசாநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆசியாவில் முதன்முறையாக ஜேம்ஸ் மெடிசன் நம்பிக்கை புலமைப் பரிசிலை இரண்டு தடவைகள் பெற்றவர்.2005ம் ஆண்டு கென்ட் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் ஆயுட் பட்டம் பெற்றார்.
தற்போது வரையில் ஒட்டாவா சென் போல் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக உள்ளார்.மிக முக்கியமாக அவர் ஒரு பௌத்த சிந்தனைவாதி.பௌத்த துறவிகளுக்கும், யுத்தத்துக்குமான இடைத்தொடர்புகள் குறித்த இரண்டு புத்தகங்களையும், ஏனைய சில புத்தகங்களையும் அவர் எழுதி வெளியிட்டுள்ளாராம்.

No comments