Header Ads

test

கூகுளுக்கே சவால் விடும் இந்திய நிறுவனம்,4.8MB மட்டுமே!

இந்திய தொலைத்தொடர்பு துறையில் காலடி எடுத்து வைத்த ஜியோ வந்த வேகத்தில் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் லாபத்தை காலி செய்தது. இதில் ஏர்டெல் வோடபோன் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களும் அடக்கம்.

இதனையடுத்து ஆன்லைன் வர்த்தகம், ஸ்மார்ட்போன் தயாரிப்பு ஆகியவற்றில் தன்னை ஈடுப்படுத்திக்கொண்டது. தற்போது அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ பிரவுசர் என்ற பிரத்தியேகமான அப்ளிகேஷனை பல்வேறு இந்திய மொழிகளில்  வெளியிட்டுள்ளதாம். இதுதான் இந்தியாவின் முதல் பிரவுசராகும்.
 தற்போது ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு மட்டும் கூகுள் பிளே ஸ்டோரில் வெளியாகியிருக்கிறது. ஐபோன்களுக்கும் விரைவில் இந்த பிரவுசர் கிடைக்கும் என தெரிகிறது.

ஜியோ பிரவுசர் என்ற இந்த பிரத்யேக ஆப் பயன்படுத்துவதற்கு எளிமையாகவும், வேகமாகவும் இயங்கும். ஜியோ பிரவுசர் வெறும் 4.8MB மட்டுமே.

மேலும், தமிழ், இந்தி, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பெங்காலி ஆகிய எட்டு இந்திய மொழிகளில் இதனை பயன்படுத்தலாம்.

No comments