Header Ads

test

ஐதேக அரசியலலையே தமிழ்க் கூட்டமைப்பு முன்னெடுக்கிறது - மகிந்த

தமிழ் மக்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் என்று தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார்.

இதன்போது புதிய அரசமைப்பு உருவாவதற்கு மஹிந்த ராஜபக்ஷ ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்து ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதற்குப் பதிலளித்த மஹிந்த,

“தமிழ் மக்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட நாம் தயார். ஆனால், தமிழ் மக்களுக்கான அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கவில்லை.

மாறாக அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கொள்கைகளையே முன்கொண்டு செல்கின்றனர். எனவே, அவர்கள் குறித்து விழிப்பாகவே இருக்கவேண்டும்” – என்றார்.

No comments