Header Ads

test

சீனாவில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் !

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பின் பேரில் சீனாவுக்கு சென்றுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.
 
திங்கள்கிழமை அவர் சீனாவுக்கு புறப்பட்டார். சீனாவில் தனது மனைவி ரி-சொல்-ஜூவுடன் ஜனவரி 7 - 10 வரை இருப்பார் என வடகொரிய அரசு ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.
அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபரிடையே இரண்டாவது உச்சி மாநாடு நடைபெறுவதாக பேச்சுவார்த்தை சென்றுகொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த பயணச் செய்தி வந்துள்ளது.
பாதுகாப்பு வசதிகளுடன் மற்ற சில மூத்த வட கொரிய அதிகாரிகளுடன் அதிபர் கிம் சீனாவுக்கு இந்த வாரம் பயணிக்கிறார். ஒரு வருடத்துக்குள் நான்காவது முறையாக சீனா செல்கிறார் அதிபர் கிம்.
வட கொரியாவுடன் ராஜீய உறவில் முக்கிய கூட்டாளியாக விளங்குகிறது சீனா. வட கொரியாவுக்கு வர்த்தக உறவிலும் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது. அதிபர் ஷி ஜின்பிங் பதவியேற்ற பின் ஆறு வருடங்களாக சந்திக்காமல் இருந்த வடகொரிய அதிபர் கடந்த வருடம் (2018-ல்) மட்டும் மூன்று முறை சந்தித்தார்.

No comments