Header Ads

test

பிக்பாஸ் டைட்டில் வின்னர் நடிகை ரித்விகாவிற்கு திருமணம்!

 மெட்ராஸ், பரதேசி, ஒரு நாள் கூத்து, அஞ்சல, கபாலி, சிகை உள்பட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை ரித்விகா. இவர் பிக்பாஸ் சீசன்  2வில் டைட்டில் வின்னர் ஆவார்.

இந்த நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே பிரபலம் ஆனார் ரித்விகா. இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக பட விழாவில் பேசிய ரித்விகா, நான் யாரோ ஒருவரை காதலித்து வருவதாகவும், இந்த வருடம் திருமணம் நடக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் தகவல் வருகிறது. நான் இந்த வருடம் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை.

என் திருமணம் அடுத்த வருடம் நடைபெறும். அதற்குள் நான் நடிக்க வேண்டிய படங்களை நடித்து முடித்துவிடுவேன். புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. திருமணத்திற்கு பின் நடிப்பதா, வேண்டாமா என் கணவர் முடிவு செய்வார் என்றார் ரித்விகா.

No comments