நாடாளுமன்ற அடிதடி - 20 எம்.பிக்களுக்கு எதிராக வழக்கு
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் 20 எம்.பிக்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படவுள்ளது.
பொது மற்றும் அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின்கீழேயே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதற்கு அனுமதி வழங்குமாறுகோரும் யோசனை அடுத்த நாடாளுமன்ற அமர்வில் முன்வைக்கப்படவுள்ளது.
2018 நவம்பர் மாதம் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரிக்க சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
பிரதி சபாநாயகர் தலைமையிலான இக்குழுவில் சமல்ராஜபக்ச, சந்திரசிறி கஜதீர ஆகியோர் உறுப்பினர்களாக பரிந்துரைக்கப்படடிருந்தாலும், விசாரணைகளில் அவர்கள் பற்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment