Header Ads

test

தமிழர்கள் பொத்திக்கொண்டிருக்கவேண்டும்: சுமந்திரன்!

மென்வலுவை பிரயோகிக்கும் நம் மனதில் கூட தமிழீழக்கனவு இருக்க கூடாதென தனது ஆதரவாளர்களிற்கு பிரசங்கம் நடத்தியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.
ஆனால் அதே நிகழ்வில் பங்கெடுத்த ஊடகவியலாளர் ந.வித்தியாதரனோ இலங்கையில் ஜனநாயக வழிமுறையில் தமிழர்களுக்கு என்றும் தீர்வு கிடையாதென போட்டுடைத்துள்ளார்.
கருத்துக்களால் களமாடுவோம் எனும் நிகழ்வை தனது ஆதரவாளர்களிற்கு இன்று யாழ்.நகரில் தமிழரசுகட்சி நடத்தியிருந்தது.
எம்.ஏ,சுமந்திரனின் ஆதரவாளர்கள் பங்கெடுத்த நிகழ்வில் தனது உபதேசங்களை வழங்கிய சுமந்திரன் சிங்களவர்களிற்கு சந்தேகம் வராத நிலையில் தமிழ் மக்கள் நடந்துகொள்ளவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே இந்நிகழ்வில் சுமந்திரனின் ஊதுகுழலான டாண் தொலைக்காட்சி நிகழ்வை நேரடியாக அஞ்சலி செய்திருந்தது.
 
எனினும் ஊடகவியலாளர் வித்தியாதரனை அழைத்து உரையாற்ற அனுமதிக்க சொந்த செலவில் சூனியம் வைத்தது போன்று இன்றைய நிகழ்வு மாறியிருந்தது.
தமிழரசுக்கட்சி மற்றும் கூட்டமைப்பின் அரசியல் பற்றி வெளுத்து வாங்க வந்திருந்த சுமந்திரன் ஆதரவாளர்கள் தர்மசங்கடத்துடன் நெளியவேண்டியிருந்தது.
இதனிடையே தனது நேரடி ஒளிபரப்பினை குறித்த தொலைக்காட்சி இடைநிறுத்திக்கொண்டது.
 

No comments