Header Ads

test

முந்திரிக்கொட்டை பொறியியலாளரும் வேண்டுமாம்?

இரணைமடுக்குளம் தொடர்பில் முந்திரிக்கொட்டை செயற்பாட்டில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளரை எவ்வாறேனும் அதற்குள் கோத்துவிட தமிழரசு கட்சி முகவர்கள் மும்முரமாகியுள்ளனர்.
தற்போது தமிழரசுக்கட்சி சொத்தாகியுள்ள இரணைமடு விவசாய சம்மேளணம் பேரில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரணைமடுக் குளம் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர் சு.சிவகுமார் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
சுமந்திரன் தரப்பின் அழைப்பின் பேரில் அவர்களது நிகழ்வொன்றில் பங்கு பற்றி உரையாற்றிய அவர் நாம் இன்று 5 வருடத்தை வீனாக்கி விட்டோம் உதாரணம் சி.வி.விக்னேஸ்வரன், அதாவது அபிவிருத்திகள் சமாந்தரமாக இருக்க வேண்டும். யுத்தம் முடிந்து 10 வருடம் கழிந்தும் முன்னேற சரியான திட்டம் எம்மவர்களிடம் இல்லை. 5 வருட மாகாண சபையில் பஸ்ராண்டும், அம்மாச்சியுமே கண்டினது மிச்சம். மாகாண சபை கைதடியில் இருக்க வேண்டிய தேவை இல்லையென தெரிவித்திருந்தார்.
வடமாகாணசபை தொடர்பில் அவர் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்ட எதிர்பார்த்த பதவி கிடைக்காமையே காரணமென உள்வீட்டு தகவல்கள் சொல்கின்றன.
அவரது தனிப்பட்ட காழ்ப்புணர்வினாலேயே இரணைமடுக்குள வெள்ள விசாரணைக்குழுவிலிருந்து அவர் இரவோடிரவாக விரட்டப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரினை மீண்டும் உள்ளே கொண்டுவர அவரால் தவறு எனச் சுட்டிக்காட்டும் விடயங்கள் தொடர்பில் அக் குளத்திணை நம்பிவாழும் எமக்கு எழும் வினாக்களிற்கான பதில்களை குறித்த விரிவுரையாளரிடமிருந்து அறிந்து தர ஆவன செய்யுமாறு கோரியே பீடாதிபதிக்கு குறித்த மனு கையளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பீடாதிபதிக்கு சமர்ப்பித்த மனுவில்  அண்மைக்காலமாக இரணைமடுக் குளத்தின் மீதும், பொறியியலாளர்கள் மீதும் வட மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சு.சிவகுமார் சுமத்தி வருகின்றார்.
இரணைமடுக் குளத்தின் முன்னாள் பொறியியலாளர் என்ற வகையிலும், தற்போது அவர் யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் விரிவுரையாளர் என்ற வகையிலும், சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை வெறும் ஊடக செய்தி என ஒதுக்கி விட முடியாதவர்களாக உள்ளோம். நாமும் ஒரு சமூகத்தின் பொறுப்பு மிக்க கட்டமைப்பு என்ற வகையில் இதன் உண்மைத் தன்மைகளை அறிய வேண்டியவர்களாக உள்ளோம். எனவே எமக்கு எழுகின்ற வினாக்களிற்கான பதில்களை துறைசார் நிபுணத்துவ ரீதியாகவும், விஞ்ஞான பூர்வமாகவும், தரவு ரீதியான சான்றுப்படுத்தல்களுடன்  சு.சிவகுமாரிடமிருந்து கிடைக்க தலைமை பீடாதிபதி என்ற வகையில் தாங்கள் ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம்.
சு.சிவகுமாரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களான குளத்து நீரை முன்கூட்டியே குறைத்து வைத்திருக்கவில்லை, நீர் வரத்து ஆரம்பித்த பின்பும் வான் கதவுகள் தூக்கப்படாதிருந்தது, இடதுகரை துருசுப்பகுதிக்கு மேலால் நீர் வெளியேறியது. குளத்திற்கு அனர்த்தத்தை ஏற்படுத்தியிருக்கும், குளத்திற்கு பொறுப்பாக இருந்த பொறியியலாளர்கள் திறமையற்றவர்கள், வடமாகாண நீர்ப்பாசன திணைக்களமும் திறமையற்றது, மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் ஆலோசனைகள் பெறப்பட்டிருத்தல் வேண்டும். ஆகியவற்றுடன் தன் போன்றவர்களிடம் ஆலோசனை பெற்றிருத்தல் வேண்டும், விசாரணை நடாத்தப்பட வேண்டும். போன்ற 8 குற்றச்சாட்டுக்கள் வெளியிட்டிருந்தமை தெரிந்ததே.

No comments