Header Ads

test

பாஜகவில் இணைய தயார்: உதயநிதி

திமுகவில் உள்ள முதுபெரும் தலைவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு உதயநிதி ஸ்டாலின் கட்சியின் முக்கிய பதவியை பிடிக்க முயற்சிப்பதாக ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில் திமுகவின் டிரஸ்ட்டில் அவருக்கு முக்கிய பதவி அளிக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் பாஜக ஆதரவாளர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் அந்த பாஜக ஆதரவாளர் பதிவு செய்துள்ள இன்னொரு டுவீட்டில் காங்கிரஸ் கட்சியில் ராஜீவ், சோனியா, ராகுல், பிரியங்கா எனவும், திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி எனவும் முடியாட்சி போல் வாரிசுகள் பதவி சுகத்தை பெறுகின்றனர். தமிழிசை, நிர்மலா சீதாராமன் போன்றோர் பதவி பெற இந்த கட்சிகளில் வாய்ப்பு இல்லை என்றும் பாஜகவுக்கும் திமுகவுக்கும் இதுதான் வித்தியாசம் என்றும் கூறியுள்ளார்.

இதனை கண்டு கொதித்தெழுந்த உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த நபரிடம் 'நான் திமுக டிரஸ்ட்டில் இருப்பதாக நீங்கள் நிரூபித்தால் நான் பாஜகவில் இணைந்து மிகக்கொடுமையான தண்டனையை அனுபவிக்க தயார்' என்று கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் வாரிசு அரசியல் குறித்து உதயநிதி எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

No comments