சிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு!
சிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு அவர்கள் வசம் இருந்த அனைத்து நகரங்களும் மீட்கப்பட்டுள்ளன.
எனினும் நாட்டின் தென்மேற்கு பகுதியிலுள்ள இத்லிப் மாகாணத்தில் அல்-கொய்தா அமைப்பின் ஆதரவுபெற்ற ஹயாத்தாஹிர் அல்ஷாம் பயங்கரவாத இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
அவர்கள் வசம் உள்ள நகரங்களை மீட்க இத்லிப் மாகாணத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு படைக்கு ஆதரவாக ரஷ்யா மற்றும் ஈரான் படைகள் பயங்கரவாதிகளை குறிவைத்து வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ரமழான் பண்டிகை கொண்டாட்டத்தின் போது இத்லிப் மாகாணத்தில் அரசு படைகள் வான்தாக்குதல் நடத்தின.
இதன்போது 5 சிறுவர்கள் உள்ளிட்ட 10 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment