Header Ads

test

பிரான்ஸிற்கு அழைத்து வரப்படவுள்ள 12 அகதிச் சிறுவர்கள்!

சிரிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 சிறுவர்கள் பிரான்ஸிற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
அண்மைக்காலமாக தொடர்ந்தும் சிரியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வரும் பிரான்ஸ் பயங்கரவாதிகளின் பிள்ளைகளே இவ்வாறு அழைத்து வரப்படவுள்ளனர்.
மேற்கு பரிசிலுள்ள Villacoublay விமான நிலையம் ஊடாக இவர்கள் அழைத்து வரப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
1 வயதில் இருந்து 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களே இவ்வாறு பிரான்ஸிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு அழைத்து வரப்படும் சிறுவர்கள் எங்கு தங்க வைக்கப்படவுள்ளனர் என்ற தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடப்படுகின்றது.

No comments