இந்திய விமானம் 13 பேருடன் மாயம்: தேடுதல் பணி தீவிரம்
விமான ஊழியர்கள் எட்டுபேர் மற்றும் ஐந்து பயணிகளுடன் காணாமல் போயுள்ள இந்திய விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அசாம் மாநிலம், ஜோர்கத் தளத்திலிருந்து நேற்று மதியம் 12.25 மணியளவில் புறப்பட்டு சென்ற என்டோனோவ் எ.என்- 32 ரக விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளது. மேலும் குறித்த விமானம் நேற்று மதியம் 1மணியளவில் அருணாசல பிரதேசம்- மென் சுக்கா என்னும் இடத்தில் சென்றபோது, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்தே விமானம் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுள்ளது. ஆனால் இதுவரையும் விமானம் குறித்த எந்ததொரு தகவலும் கிடைக்கவில்லையென பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையிலேயே 13 பேருடன் காணாமல் போன இந்திய விமானத்தை தேடும் பணிக்காக விமானப்படை மற்றும் இராணுவத்தினர் அதிகளவு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் தேடுதல் பணியை தீவிரப்படுத்துவதற்காக C-130J என்ற விமானப்படை விமானமும் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment