ஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்!
ஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்டர் அளவில் அளவில் கடந்த செவ்வாய்கிழமை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகவா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சுமார் 1 மீட்டர் உயரம் வரை சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் ஆரம்பத்தில் எச்சரித்திருந்தாலும், 10 செ.மீ. உயரத்திலேயே சுனாமி அலைகள் எழுந்ததாக கூறப்படுகின்றது.
இதன்போது 21 பேர் காயமடைந்ததாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இதன்போது ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.
Post a Comment