2ஆம் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!
இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த இரு இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தை சேர்ந்த பாலுராம் மற்றும் ஜாஜ்ஜார் மாவட்டத்தை சேர்ந்த ஹரிசிங் ஆகியோரின் உடல்களே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இவர்கள் இருவரும் 1944ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின்போது இத்தாலியில் ஜெர்மனிய படைகளுக்கு எதிராக போரிட்டு உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த இருவரின் உடல்பாகங்கள் கடந்த 1960 ஆண்டு கண்டறியப்பட்ட நிலையில், அவர்கள் எந்த படைப்பிரிவை சேர்ந்தவர்கள் என்பது பற்றிய தேடல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த தேடல் நடவடிக்கையில், குறித்த இருவரும் இந்தியர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், இந்திய இராணுவத்தினரின் உதவியுடன் இருவருடைய குடும்ப உறுப்பினர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இருவரின் உடல்களும் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், கிராம மக்கள் முன்னிலையில், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Post a Comment