Header Ads

test

மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர் முஸ்லிம் தலைமைகள்!

பதவிகளை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றுள்ளனர்.

அதற்கமைய ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரே இன்று (புதன்கிழமை) மீண்டும் பதவியேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் அவர்கள் இன்று தமது பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டனர்.
நாட்டில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, தாக்குதல்களுடன் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் , ஹிஸ்புல்லா ஆகியோருக்கு தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
அத்தோடு, அவர்களை பதவி விலக்குமாறு பலராலும் வலியுறுத்தப்பட்டதோடு, போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
இதனையடுத்து, குறித்த மூவர் உள்ளிட்ட முஸ்லிம் தலைமைகள் 9 பேர், முஸ்லிம் மக்களுக்கு இலங்கையில் பாதுகாப்பில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.
அதன் பின்னர் மீண்டும் பதவிகளை ஏற்றுக்கொள்ளுமாறு சிலர் வலியுறுத்தியிருந்தனர். அத்தோடு, மீண்டும் பதவியேற்பது குறித்து நேற்று முஸ்லிம் தலைமைகளின் கூட்டமும் இடம்பெற்றது. எனினும் அந்தக் கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லையென்றேக் கூறப்பட்டது.
இவ்வாறான நிலையில் இன்று ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் மீண்டும் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments