இலங்கைக்கு சிறப்பு தூதுவரை அனுப்புகிறார் ஜப்பானிய பிரதமர்!
கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் மற்றும் இலங்கை மீதான பயண ஆலோசனைகள் குறித்து பேச்சு நடத்த ஜப்பானிய பிரதமர் ஷின்ஜோ அபே, இலங்கைக்கு சிறப்பு தூதுவர் ஒருவரை அனுப்ப முடிவு செய்துள்ளார்.
ஜப்பானிய பிரதமர் அனுப்பும், அவரது சிறப்பு ஆலோசகர் டொக்டர் ஹிரோட்டோ இஸுமி, இந்த மாத இறுதியில் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சு நடத்துவார். ஜூன் 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதிக்குள் குறித்த பேச்சு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஜப்பானிய சிறப்பு தூதுவரின் விஜயத்தின் போது ஜப்பானிய அரசாங்கத்தால் இலங்கை மீதான பயண ஆலோசனையில் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு பிரதமர் விக்ரமசிங்க கோரிக்கை விடுப்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது அவர் மத்திய அதிவேக வீதி அமைக்கும் திட்டத்தில் பிரச்சினைகள் பற்றியும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது

Post a Comment