Header Ads

test

வவுணதீவு கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

மட்டக்களப்பு- வவுணதீவில் இரண்டு பொலிஸாரை சுட்டுக் கொலை செய்வதற்குப் பயன்படுத்திய இரு மோட்டர் சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். காத்தான்குடி மற்றும் ரிதிதென்னை பகுதிகளில் நேற்று முன்தினம் குற்றவிசாரணை பிரிவினர் அவற்றை மீட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் நவம்பர் 29 ஆம் திகதி வவுணதீவு வலையிறவு பாலம் அருகில், பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸார் இருவரை துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்து விட்டு அவர்களிடம் இருந்த இரண்டு கைத்துப்பாக்கிகளையும் சந்தேகநபர்கள் எடுத்துச் சென்றனர்.


இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த முகமது ஆப்தீன் மில்கான், மற்றும் சஹ்ரானின் சாரதியான முகமது ஷரிப் ஆதம்பாலெப்பை கபூர் ஆகிய இருவரும் பயன்படுத்திய பல்சர் ரக, மோட்டர் சைக்கிளை காத்தான்குடியிலுள்ள மில்கானின் வீட்டில் வைத்தும், பொலன்னறுவை மட்டக்களப்பு எல்லைப் பிரதேசமான ரிதிதென்னை பகுதியிலுள்ள ஷரீப் ஆதம்பாலெப்பை கபூரின் நண்பர் ஒருவரின் வீட்டில் இருந்தும் பிறிதொரு மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றவிசாரணை பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments