Header Ads

test

வெண்ணப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை!

வடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வெண்ணப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது.
வெண்ணப்புவ பிரதேச சபைத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபையால் குறித்த சந்தையில் வியாபாரம் நடத்தப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த வியாபாரிகளுக்கு தற்காலிக தடைவிதிப்பதாகவும் அதற்கு வேண்டிய நடவடிக்கை எடுக்கவேண்டியும் தங்கொட்டுவ பொலிஸ் அத்தியட்சகரிடம் வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதேச சபைத் தலைவர் சுசந்த பெரேரா பிரதேச அரச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 36,819 வாக்குகளை பெற்று 24 உறுப்பினர்களுடன் பெரும்பான்மை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments