பரபரப்பான சூழலில் இன்று மீண்டும் தெரிவுக்குழு விசாரணை!
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் இன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் சாட்சியமளிக்கவுள்ளனர்.
அத்துடன் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியும் இன்று சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.
|
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்புக்கு மத்தியில், இன்றைய தெரிவுக்குழு விசாரணை நடைபெறவுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில், இன்றைய விசாரணை இடம்பெறவுள்ளது.
|
Post a Comment