உகண்டாவை அச்சுறுத்தும் எபோலா!
உகண்டாவிலும் எபோலா வைரஸின் தாக்கம் உணப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
5 வயதுச் சிறுவன் ஒருவன் எபோலா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
குறித்த சிறுவன் தனது பெற்றோருடன் கொங்கோ எல்லை வழியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணித்த நிலையிலேயே இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் தற்போது மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயக குடியரசில் எபோலா நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கொங்கோ சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இதுவரையில் எபோலா நோயினால் 2008 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவர்களில் 1,914 பேருக்கு எபோலா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2014 – 2016 ஆம் ஆண்டில் எபோலா உயிர்க்கொல்லி நோயால் 11,300 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment