மனுஸ்தீவில் தற்கொலைக்கு முயன்றார் சூடான் அகதி
மனுஸ்தீவில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சூடான் அகதி தற்கொலைக்கு முயற்சித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்ரேலியாவில் லிபரல் கூட்டணி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைத்துள்ள நிலையில், புகலிடக் கோரிக்கையாளர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்தநிலையிலேயே மனுஸ்தீவில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சூடான் அகதி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த தற்கொலை முயற்சி உடனடியாக தடுக்கப்பட்ட போதிலும், ஏனைய அகதிகள் தற்கொலைக்க முயற்சிப்பதற்கான ஆபத்தான நிலை காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவுஸ்ரேலியாவில் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலுக்கு பின்னர் மனுஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்;டுள்ள 50 இற்கும் மேற்பட்ட அகதிகள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது
Post a Comment