தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்கு ஜனாதிபதி ஒத்துழைக்க வேண்டும் – இராதாகிருஸ்ணன்
குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள ஸ்தாபிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தெரிவுக்குழு குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த தெரிவுக்குழு விசாரணைகளை முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இல்லாவிட்டால் இந்த தெரிவுக்குழு தொடர்பாக மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் தெரிவுக்குழுவின் விசாரணைகள் தடையின்றி முன்னெடுக்கப்பட வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment