பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி அதிரடியாக கைது
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதியும் மறைந்த பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் கணவருமான ஆசிப் அலி சர்தாரி பல மில்லியன் டொலர் பணமோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் சட்டமன்ற உறுப்பினரான இருக்கும் சர்தாரி மற்றும் அரசியல்வாதியான அவருடைய சகோதரியிடம் போலி கணக்குகள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்த வழக்கு விசாரணைக்காக இன்று (திங்கட்கிழமை), இருவரும் கடுமையான பாதுகாப்புடன் நீதிமன்ற விசாரணையில் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த பிணையினை நீட்டிக்கும்படி சர்தாரி மற்றும் அவரது சகோதரி தாக்கல் செய்த மனுவை இஸ்லாமாபாத் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
இதனை அடுத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஆசிப் அலி சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Post a Comment