Header Ads

test

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நோட்ரே டாம் தேவாலயத்தில் வார இறுதி வழிபாடு!

பரிஸின் புகழ்பெற்ற நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து உலகளவில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில் தீ விபத்திற்கு பின்னர் அங்கு முதன்முறையாக வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியில் குறித்த வழிபாடுகள் நடைபெறவுள்ளதாக பரிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பரிஸின் புகழ்பெற்ற நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தேவாலயத்தின் கூரை முற்றாக சேதமடைந்தது.
குறித்த தீ விபத்தினைத் தொடர்ந்து தேவாலயத்தில் எந்தவொரு வழிபாடுகளும் நடைபெறவில்லை.
இந்தநிலையில் நடைபெறவுள்ள வாரயிறுதி வழிபாடுகளில் பங்கேற்பதற்காக 20 பேருக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், தேவாலயத்தில் நடைபெறவுள்ள வழிபாடுகள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

No comments