பயிற்சில் ஈடுபட்ட இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளருக்கு காயம்
உலகக்கிண்ண போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபட்ட இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் காயமடைந்துள்ளார்.
இன்று இலங்கை அணியினர் மேற்கொண்ட பயிற்சிகளின் போது அவரது வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகக்கிண்ண தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த 3 போட்டிகளில் இலங்கை அணி 1 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு போட்டியில் சமநிலையை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் 4 ஆவது லீக் போட்டியில் நாளை மறுதினம் பிரிஸ்டல் மைதானத்தில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
இவ்வாறு இருக்கையில் இலங்கை அணி சார்பாக கடந்த போட்டியில் துல்லியமான பந்துவீச்சை பதிவு செய்த நுவன் நுவான் பிரதீப்பிற்கு காயம் ஏற்பட்டமை அவ்வணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment