மட்டக்களப்பிலும் தொடரும் போராட்டம் – வியாழேந்திரன் நேரில் சென்று ஆதரவு
கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பில் முற்போக்கு தமிழர்கள் அமைப்பினர் முன்னெடுத்துவரும் போராட்டக் களத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்புக்குச் சென்ற அவர் அங்கிருந்து போராட்டக்களத்திற்கு பேரணியாகச் சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கல்முனையில் சர்வ மதத்தலைவர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு இணைவாக மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக முற்போக்கு தமிழர்கள் அமைப்பினால் நேற்று முன்தினம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஒரு இனம் இன்னுமொரு இனத்தின் உரிமையினை பறிக்கும் வகையிலான செயற்பாடுகள் கல்முனையில் முன்னெடுக்கப்படுவதாக இதன்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்தோடு, கல்முனை பிரதேச செயலகம் உடனடியாக தரமுயர்த்தப்படவேண்டும் என்றும் இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
Post a Comment