Header Ads

test

பீகாரை அச்சுறுத்தும் வெயில் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பீகார் மாநிலத்தில் நிலவி வருகின்ற கடுமையான வெயில் காரணமாக தற்போது வரையில் 61 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  100 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. வெயிலுடன் அனல் காற்றும் வீசி வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பீகாரின் தலைநகர் பாட்னாவில் 45.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவிவருகின்றது. இதன்காரணமாக குறித்த பகுதியில் எதிர்வரும் 19ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் மக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்குமாறும் பீகார் மாநில அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments