சஹரானுடன் நெருக்கமான இருவர் கண்டியில் கைது!
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான பயங்கரவாதி சஹரானுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிவந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் கண்டியிலுள்ள ஹின்குள்ள பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பாதுகாப்புப் படையினரும், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கைதான 102 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
குறித்த 102 பேரில் 77 பேரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மிகுதி 25 பேரை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தடுத்து வைத்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment