Header Ads

test

பலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்!

முஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது.
17ஆவது மக்களவைக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
இந்த கூட்டத்தொடரின்போது 10 அவசரச்  சட்ட மூலங்களை சட்டமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 10 அவரசச்  சட்டங்களின் நகல்களும் நேற்று இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
45 நாட்களுக்குள் இந்த அவசரச் சட்ட மூலங்கள் அவையில் நிறைவேற்றப்படாவிட்டால் காலாவதியாகிவிடும் என்ற காரணத்தினால் குறித்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முஸ்லிம் பெண்களிற்கு மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்ட மூலம் கடந்த 16ஆவது மக்களவையின் போது தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்டமூலத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன்காரணமாக மத்திய அரசால் மாநிலங்களவையில் போதுமான பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், குறித்த மசோதா காலாவதியாகியது.
இந்த சட்டமூலத்தின்  மூலம் முத்தலாக் முறையை பின்பற்றும் கணவனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கவும், பிணையில் வெளிவர முடியாத பிரிவில்  கைது செய்யவும் முடியும் என்பது  குறிப்பிடத்தக்கது.

No comments