காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட சேவா பவனில் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகரன் மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியன், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது தமிழக அரசு உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், மேகதாதுவில் புதிய அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடகத்துக்கு எதிர்ப்பை தெரிவித்தது. மேலும் ஜூன் ஜூலை ஆகிய 2 மாதத்துக்குரிய 40.43 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீர்வரத்து, மழையை பொறுத்து நீரை திறந்து விடுமாறு காவிரி மேலாணமை ஆணையம் அறிவுறுத்தியது. அதற்கு கர்நாடக அரசு மழையின் அளவை பொறுத்து தங்களால் முடிந்த அளவு தண்ணீர் திறக்க சம்மதம் தெரிவித்துள்ளது

Post a Comment